அதிமுக கட்சியில் மூத்த தலைவர்களான அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோர் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதைப் போன்று அதிமுக கட்சியில் சில முக்கிய தலைவர்களும் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அதிமுக கட்சிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியின்போது தம்பிதுரை எடப்பாடி பழனிசாமி பேச விடாமல் இடை மறித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சியிலிருந்து விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுவரை தம்பிதுரை தரப்பிலிருந்து இந்த செய்திக்கு விளக்கம் வராத நிலையில் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.