பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண் இறந்த பிறகு சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 32 வயதுடைய நிக்கோலா என்ற பெண் வலிப்பு நோய்க்கான மருந்தை எடுத்தார். அவரது உடல்நலம் மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு 24 மணி நேர சிகிச்சைக்கு பிறகு நிக்கோலா கோமா நிலைக்கு சென்றார். அவர் உயிர் பிழைப்பதற்கு 20% மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்த நேரம் அதிசயமாக நிக்கோலா உயிர் பிழைத்தார்.
பின்னர் கண்விழித்த நிக்கோலா கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. கோமாவில் இருக்கும் போது தான் முழுவதும் இறந்து விட்டதாகவும், சொர்க்கத்திற்கு செல்லவிருந்ததாகவும் கூறினார். சொர்க்கம் என்பது நாம் நினைப்பதைப் போல் இல்லாமல் வானத்திலிருந்து ஒருவித அரவணைப்பும், ஒளியும் மட்டுமே வந்தது. அதை உணர்ந்த பிறகு மரணத்திற்கு பிறகு ஏதோ ஒன்று இருப்பதை புரிந்து கொண்டதாக நிக்கோலா கூறினார்.