பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை மிக தீவிரமாக வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓட, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆனால், இந்த மழை வெறுமனே வீடுகளை மட்டும் பாதிக்கவில்லை; உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானை தாக்கி வரும் இந்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. \
வானிலை ஆய்வு மையம் இன்னும் பதற்றமூட்டும் செய்தியை வெளியிட்டுள்ளது – ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை இந்த கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், மீட்புப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. மக்களை பாதுகாக்க மீட்பு குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
இந்த இயற்கை பேரிடர் பாகிஸ்தானை மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் மன உறுதியையும் சோதித்து வருகிறது. மழை நின்று, மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.