பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வடமேற்கு பகுதிகளில் நிலைமை மிகக் கடுமையாகியுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் மட்டும் 307 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் சாலைகள் அடைந்ததால் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, அடைபட்ட சாலைகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“>
பாகிஸ்தானில் இந்த பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்ததால் சாலைகள், வீடுகள், கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. திடீர் மேக வெடிப்பு, நிலச்சரிவு, மின்னல் தாக்குதல் போன்றவை உயிரிழப்பை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலரை காணாமல் போனவர்களாக பதிவு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“>
அவசர நிலை காரணமாக அரசாங்கம் நிதி ஒதுக்கி மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளது. வானிலை மையம், ஆகஸ்ட் 21 வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெள்ள அபாயம் இன்னும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தொடர்ந்த மழையால் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
“>