சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெரிய ராஜ நாகத்தை ஒருவன் பயமின்றி பிடிக்க முயற்சிப்பதை காணலாம். ராஜ நாகம் உலகின் மிகவும் ஆபத்தான விஷ பாம்புகளில் ஒன்றாகும். இப்படிப் பட்ட பாம்பு ஒருவரை கடித்துவிட்டால், உடனடி சிகிச்சை கிடைக்காவிட்டால் உயிரிழப்பு நிச்சயம். ஆனாலும், அந்த மனிதன் எந்த வித அச்சமுமின்றி பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில், பாம்பு அவரை பலமுறை தாக்க முயற்சித்தது, ஆனால் அவர் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் அதிலிருந்து தப்பித்தார்.
இந்த மனிதர் ஒரு தொழில்முறை பாம்பு பிடிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. ஒரு குழாயின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அவர் ராஜ நாகத்தை பாதுகாப்பாக பிடித்து ஒரு பையில் அடைத்தார். இந்த அசத்தலான சம்பவம் சமூக ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் wild_whisperer என்ற ஐடியிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ ஏற்கனவே 93 மில்லியன் முறை (அதாவது 9.3 கோடி முறை) பார்வையிடப்பட்டு, 15 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
A post shared by Arshad Khan (@wild_whisperer)
“>
இதனை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமாகக் கருத்து தெரிவித்துள்ளார். “இவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்தால் நான் 10 கிலோமீட்டர் தூரம் போய்த் திரும்பிப் பார்க்க மாட்டேன்” என்று ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். “AI கூட இந்த வேலையை செய்ய முடியாது” என மற்றொருவர் எழுதியுள்ளார்.
\“இந்த நபர் ராஜ நாகத்தை காப்பாற்றுகிறார், ஆனால் அதை பார்த்த பிறகு எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது போலிருக்கிறது” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பாம்பு பிடிப்பவரின் தைரியத்தை பாராட்டி, “எந்த பாதுகாப்பும் இல்லாமல் இப்படிப் பிடிக்கிறீர்கள், உங்களுக்கு வணக்கம்” என்று பலர் புகழ்ந்து வருகின்றனர்.