ஆப்கானிஸ்தானை ஒரே மாதத்தில் உலுக்கிய மூன்றாவது நிலநடுக்கம்.. 4.9 ரிக்டர் ஆக பதிவு!
TV9 Tamil News August 17, 2025 02:48 PM

காபூல், ஆகஸ்ட் 17 : ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில் அங்கு ஏற்கனவே இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 17, 2025) இரவு மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு சரியாக 11.05 மணி அளவில் 4.9 ரிக்டர் அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் நிலநடுக்கங்களை சந்திக்கும் ஆப்கானிஸ்தான்

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 16, 2025) இரவு 11.05 மணி அளவில் அங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக அங்கு மேலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஒருவர் உயிரிழப்பு..

தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் பதிவு

EQ of M: 4.9, On: 16/08/2025 23:05:03 IST, Lat: 36.83 N, Long: 71.01 E, Depth: 10 Km, Location: Afghanistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/6LNUE8mZAQ

— National Center for Seismology (@NCS_Earthquake)

ஒரே மாதத்தில் ஆப்கானிஸ்தானில் மூன்றாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 08, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 10 கிலோ மீட்டர் தூரம் ஆழம் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 13, 2025 அன்று ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.

இதையும் படிங்க : ரஷ்யாவில் 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்த எரிமலை.. நிலநடுக்கத்தின் எதிரொலி?

மீண்டும் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அது பூமியின் மேற்பரப்புக்கு வருவதற்குள்ளாக அதன் ஆற்றலை இழந்துவிடும். ஆனால், குறைவான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அது பூமியின் மேற்பரப்பை பாதிக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.