நாகை, காங்கேஷன்துறை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இந்தியா, இலங்கையில் 3, நாட்கள் சுற்றிப் பார்க்க பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சலுகை, பேக்கேஜ் உடன் கூடிய 9, ஆயிரம் ரூபாய் கட்டணம அறிவிக்கப்பட்டது.
இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 2023 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்கள் இந்தியா இலங்கை இடையிலான இந்த கப்பல் சேவையினை சுபம் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் இருவழிப் பாதை டிக்கெட் மற்றும் இந்தியா அல்லது இலங்கையில் 3 நாட்கள் தங்கி சுற்றி பார்க்க பேக்கேஜுடன் கூடிய கட்டணமாக 9000 ரூபாய் அறிவித்துள்ளது.
இதனிடையே நாகை துறைமுகத்திலிருந்து 51, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை கப்பலானது புறப்பட்டது. இரண்டாம் ஆண்டு கப்பல் சேவை நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு புறப்படுவதை முன்னிட்டு கப்பலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கப்பலில் பயணம் மேற்கொண் பயணிகளுக்கு, இனிப்புகள் வழங்கி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் தமிழகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்வதால், மாணவர்களுக்காக சிறப்பு பேக்கேஜ் கட்டணத்தை தங்களது கப்பல் நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறினார்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு சலுகையை பயன்படுத்தும் வகையில் இன்று முதல் இருவழிப் பாதை டிக்கெட் மற்றும் இந்தியா அல்லது இலங்கையில் 3 நாட்கள் தங்கி சுற்றி பார்க்க பேக்கேஜுடன் கூடிய கட்டணமாக 9000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுந்தர ராஜன் தெரிவித்தார்.