வாக்கு திருட்டுக்கு உதவிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீபந்தம் ஏந்தி பேரணி!
Seithipunal Tamil August 17, 2025 07:48 PM

வாக்குத் திருட்டை கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஒரு பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து வெளியிட்ட காணொளி தமிழாக்கம் செய்து ஒளிபரப்பப்பட்டது.

தேர்தலை நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறவும், மோடி பிரதமராக பதவி ஏற்கவும், வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு உறுதியாகியுள்ளது.

வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் தீபந்த பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் வைத்தியநாதன், ஏ.ஐ.சி.சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பங்கேற்றனர்.

பேரணி கொக்கு பார்க் சிக்னலில் இருந்து புறப்பட்டு ஜீவா காலனி வழியாக லாஸ்பேட்டை உழவர் சந்தையில் முடிவடைந்தது.முதலில் வாக்குத் திருட்டை நிறுத்துங்கள் என்ற விளம்பரப் பிரசுரங்களை பேரணியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டினர்.

வாக்குத் திருட்டை கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஒரு பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து வெளியிட்ட காணொளி தமிழாக்கம் செய்து ஒளிபரப்பப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.