முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டத்தின் சாதனையை பெருமிதத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார். “திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ₹1,000 வீதம் சேமித்து, ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமிக்க முடிந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். மகளிரின் பொருளாதார நிலை உயர்வில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவதாகவும் முதல்வர் வலியுறுத்தினார்.