வேளாங்கண்ணி திருவிழா... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Dinamaalai August 19, 2025 01:48 PM

நாகை  மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேளாங்கண்ணி திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண். 06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர்  3 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11, 2025 ஆகிய தேதிகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.

ரயில் பெட்டிகள் அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 8- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- பிரேக் வேனுடன் கூடிய லக்கேஜ்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.