வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவையொட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
இது குறித்து நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “18-08-2025 மற்றும் 19-08-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என்று தெரிவித்திருந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?