தொடர் சரிவில் தங்கம் விலை... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
Dinamaalai August 19, 2025 03:48 PM

 

சென்னையில் ஆபரணத்  தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.  தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 8ம் தேதி அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது.  


இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை இறங்கு முகத்தில் இருந்ததால்  நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரத்தின் முதல் நாளான நேற்றும்  தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை.  இதன்படி நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.9,275-க்கும், ஒரு சவரன் ரூ. 74,200-க்கும் விற்பனையானது.  

இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.9.235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.73,880 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை  கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 126க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.