இன்று அதிகாலை இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... ரிக்டர் 4 ஆக பதிவு!
Dinamaalai August 20, 2025 01:48 PM

இன்று அதிகாலை 3.27 மணியளவில் இமாச்சல பிரதேசம் சம்பா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் 4 ஆக பதிவாகி உள்ளது. 

அதன் பின்னர் மீண்டும் இன்று காலை 4.39 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


 

10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 32.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.