இன்று காலை 9 மணி முதல் சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்!
Dinamaalai August 20, 2025 01:48 PM

இன்று காலை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று காலை மணலி மண்டலத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(மண்டலம்-2), வார்டு-19க்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. மாத்தூர், 2வது பிரதான சாலையில் உள்ள ராயல் பேலஸ், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-26க்குட்பட்ட மாதவரம் பால் காலனியில் உள்ள தனுவாஸ் மினி ஹால், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-57க்குட்பட்ட ஆதியப்பா தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி, திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-70க்குட்பட்ட பெரம்பூர், பந்தர் கார்டன் பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-87க்கு உட்பட்ட பாடி, கம்பர் தெருவில் உள்ள அன்னை மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-115க்குட்பட்ட இராயப்பேட்டை, ஜானி ஜஹான் கான் சாலையில் உள்ள பிரசன்டேசன் ஆலய சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-131க்குட்பட்ட அசோக் நகர், ருக்மணி தெருவில் உள்ள ஜி.ஆர்.டி. வாகன நிறுத்துமிடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-149க்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர், தாக்கூர் தெருவில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-187க்குட்பட்ட பாலய்யா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், சி.எல். மேத்தா கல்லூரி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் கலந்துக் கொண்டு பயனடையும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.