நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்வத்துடன் குளித்து மகிழ்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 2 நாட்களாக மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கு மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துவிட்டதால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீரானது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குற்றாலத்தில் நேற்று வெயில் அடித்தாலும் இதமான காற்றும் வீசியதால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?