தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2025 - 2026 துணை இணையதள விண்ணப்ப முகப்பு திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டயப்படிப்பு பாடப்பிரிவில் விண்ணப்பிக்க இணையதள முகப்பு (Application Portal) திறக்கப்பட்டது. இன்று முதல் துவங்கி வரும் 29.08.2025 வரை இந்த முகப்பு திறந்திருக்கும். விண்ணப்பதாரர்கள் வேளாண் இணையத்தில் சென்று, துணை இணையதள விண்ணப்பத்தினை (SUPPLEMENTARY ONLINE APPLICATION) பூர்த்தி செய்யலாம்.
மேலும் துணை இணையதள விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.