ஆசிய கோப்பை 2025 (Asia Cup)போட்டிகள் செப்டம்பர் 9, 2025 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்கேற்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது சர்ச்சையானது. இது ஒரு புறம் இருக்க, ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளுமா என்ற சந்தேகம் மக்களிடையே இருந்து வந்தது. காரணம் பிசிசிஐ சார்பில் இதற்காக முரணான பதில்களை தெரிவித்துவந்தது. இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்திய அணிய பாகிஸ்தானில் (Pakistan) நடைபெறும் போட்டியில் பங்கேற்காது. அதே போல பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் கால் பதிக்கவும் அனுமதிக்காது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில இந்தியா பங்கேற்கும் என்பதை அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் அதிகாரி ஒருவர் பிடிஐ பக்கத்துக்கு அளித்த பேட்டியில், ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறஹ்குவைத நாங்கள் நிறுத்த மாட்டோம். இது பல அணிகள் பங்கேற்கும் போட்டி. அதனால் இந்திய அணி பங்கேற்கப்தில் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சர்வதேச விளையாட்டு கொள்கைமேலும் அவர் தெரிவித்ததாவது, இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சர்வதேச விளையாட்டு கொள்கையை அறிவித்துள்ளது. அதன் படி பாகிஸ்தானுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்ப்டடுள்ளது. இந்த புதிய கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும். பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டிகளில் இந்தியா அணி பங்கேற்காது. அதே போல பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது. இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தானும் பங்கேற்காது. ஆனால் ஆசிய கோப்பை போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டிகளின்போது பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்காக இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!
இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பிடிஐ தகவல்STORY | No bilateral sporting ties with Pakistan, but cricket team for Asia Cup won’t be stopped: Sports Ministry
READ: https://t.co/JgYs7mdP4h pic.twitter.com/QztucbBF6v
— Press Trust of India (@PTI_News)
இதன் படி பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டிகளின் போது மட்டும் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். ஆனால் இரு அணிகளும் நேரடியாக நேரடியாக போட்டிகளில் பங்கேற்காது. என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிக்க : சூர்யாகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டிஇந்தியா – பாகிஸ்தான் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 14, 2025 அன்று துபாயில் நடைபெறவிருக்கிறது. தற்போது இரு அணிகளும் பங்கேற்பது ஏறக் குறைய உறுதியாகியுள்ளது. இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதலை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இதற்காக பிசிசிஐ அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகறது.