UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன்
Vikatan August 23, 2025 11:48 AM

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

UPSC/TNPSC இலவச பயிற்சி முகாம்

இது தொடர்பாகப் பேசியிருக்கும் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், " ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து 'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பில் வருகின்ற 31 ஆம் தேதி சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஒரு மாபெரும் முகாமை நடத்த இருக்கிறோம்.

இந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக முனைவர் வெ.திருப்புகழ் IAS (Retd.), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முன்னாள் ஆலோசகர், டாக்டர் K.விஜயகார்த்திகேயன் IAS, ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அத்துணை மாணவர்களுக்கும் UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது.

UPSC/TNPSC இலவச பயிற்சி முகாம்

அத்துடன் 'Current Affairs 2025' என்ற புக் லெட்டும் கொடுக்கப்பட இருக்கிறது. பாடத்திட்ட கையேடும் கொடுக்கப்பட இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. வெகு விரைவில் அரசு அதிகாரியாகப் பணியில் அமர்வதற்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இறையன்பு IAS-ஆல் முகம் மாறிய கண்ணகி நகர்! | முதல் தலைமுறை கற்றல் மையம் | Nambikkai Awards 2024 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.