ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகிya 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தி ரிஷேந்திரா, என்ற மாணவன் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக PUBG விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பள்ளிக்குச் செல்வதை கூட நிறுத்தியுள்ளார். இதையடுத்து தனது மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட சிறுவனின் பெற்றோர், அவனை மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்காக அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், ரிஷேந்திராவின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லாததால் விரக்தியடைந்த பெற்றோர், மூன்று நாட்களுக்கு முன்பு ரிஷேந்திராவின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்து வைத்துள்ளனர்.
இதனால், மனா உளைச்சலில் இருந்த ரிஷேந்திரா நேற்று யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.