சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலின் அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் பல வகையானவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவே இல்லை என்பது தான் உண்மை என்பதை சமீபத்திய வீடியோ ஒன்று தெளிவுபடுத்துகிறது. சமீபத்தில் போலவே கோஸ்டாரிகா கடற்பகுதியில் நடந்த ஒரு அதிசயச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் வலையில் சிக்கிய ஒரு விசித்திரமான சுறாவைப் பார்த்து பரவசம் அடைந்தனர். அந்தச் சுறா முழுமையாக ஆரஞ்சு நிறத்திலும், கண்கள் பால் போல வெண்மையாக காட்சி அளித்து காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இதுபோன்ற உயிரினம் இதற்கு முன்பு எந்த விஞ்ஞானிகளின் கண்களிலும் புலப்படவே இல்லை.
இது குறித்து விஞ்ஞானிகள், இந்தச் சுறாவில் ஒரே நேரத்தில் இரண்டு மரபணு மாற்றங்கள் உள்ளன . ஒன்று – சாந்திசம் எனப்படும் தோல் மீது அதிக மஞ்சள் நிறமி தேக்கப்படுவதால் உருவாகும் நிலை, மற்றொன்று – அல்பினிசம் எனப்படும் மெலனின் உற்பத்தி குறைவால் தோல் மற்றும் கண்கள் வெண்மையாகும் என விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த இரண்டு மாற்றங்களும் ஒரே உயிரினத்தில் காணப்படுவது என்பது உலகில் மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சாந்திச-அல்பினோ உயிரினங்கள் கடலுக்குள் உயிர்வாழ்வது சவாலான விஷயம் எனவும் கூறியுள்ளனர். கண்ணை கவரும் அதன் நிறம் வேட்டையாடுபவர்களுக்கு எளிதாகக் காட்சியளிக்கும் அதனால் அதன் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகி விடுகிறது என கூறியுள்ளனர்.