விஜய் இப்படி பேசினால் மக்கள் புறக்கணிப்பார்கள்...ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!
Seithipunal Tamil August 25, 2025 02:48 AM

அதிமுகவுக்கு 54 வயது. இந்த கட்சியை குறைத்து பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படிஎன்று அதிமுக முன்னாள் அமைச்சை ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசும்போது பாஜக ,அதிமுக ,திமுக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் .இது தமிழக அரசியலில் பெரும் விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து  விஜயின் பேச்சுக்கு பல்வேறு  தரப்பிலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்தநிலையில் அதிமுகவை குறைத்து பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படி என்று அதிமுக முன்னாள் அமைச்சை ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம் அலை,  ஆனால் தவெக மாநாட்டிற்கு வந்தவர்கள் விஜய் பேசுவதற்கு முன்னே கலைந்து செல்ல தொடங்கி விட்டனர்.

அதிமுக குறித்தும்,  அதிமுகவுக்கு 54 வயது. இந்த கட்சியை குறைத்து பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படி. இதேபோல் தொடர்ந்து அவர் பேசினால் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை கண்டு ஆளும் திமுக மிரண்டு போய் இருக்கிறது.

மதுரை மாநாட்டில் யாரோ எழுதி கொடுத்த வசனத்தை விஜய் பேசி, நடித்துவிட்டு சென்று இருக்கிறார். விஜய் பேச்சில் அரசியல் கருத்துக்கள் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை கூறியது பாராட்டுக்குரியது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியில் உள்ள பா.ஜனதாவும் அதிக இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.