Vishal 35: டீஸரே பிரம்மாதமா இருக்கே.. விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதோ
CineReporters Tamil August 25, 2025 02:48 AM

Vishal 35: மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. தொடர் தோல்விகளுக்கு பிறகு விஷால் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அந்தப் படம் வெளியாகி 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக அந்தப் படம் அமைந்தது.

அதுவும் ஜிவி பிரகாஷ் இசையில் படம் வேற லெவலுக்கு சென்றது. ஜிவியை பொறுத்தவரைக்கும் ஒரு பக்கம் நடிகராகவும் அவருடைய வேலைய சிறப்பாக செய்கிறார். மியூஸிக் டைரக்டராகவும் அவருடைய வேலையை சிறப்பாக செய்கிறார். இந்த நிலையில் மீண்டும் விஷால் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தான் தற்போது படம் உருவாகியிருக்கிறது. அந்தப் படத்திற்கு மகுடம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படம் விஷாலுக்கு 35வது படமாகும். ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் 99வது படம்தான் மகுடம். இந்தப் படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதைக்களமாகும் என்று சொல்லப்படுகிறது. துஷாரா விஜயன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலியும் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் விஷால் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறார் விஷால் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதில் அவருடைய திருமண வேலையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. நடிகர் சங்க கட்டிட திறப்பிற்கு பிறகு விஷால் தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் அவருடைய புதிய படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜிவியின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என டீஸரை பார்க்கும் போதே தெரிகிறது.

இதோ வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DNurU3E5p71/?igsh=N2NlZTRmejMwMnFy

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.