எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சென்னை வந்தடைந்தார்: முதல்வர் உள்ளிட்டவர்களிடம் ஆதரவு திரட்ட முடிவு..!
Seithipunal Tamil August 25, 2025 07:48 AM

எதிர்வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும் தேஜ கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த, மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி எதிர்த்து போட்டியிடவுள்ளார்.இந்நிலையில், இருகூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வந்துள்ளார். புதுடில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் ஆ. ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன்  காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகையும் வரவேற்றார்.

சென்னை வந்துள்ள சுதர்சன ரெட்டி, தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.