என்னோட வாழ்க்கையில இப்படி ஒரு அற்புதமான ருசியை சாப்பிட்டதே இல்லை..! “முதல்முறையாக கொழுக்கட்டை சாப்பிட்ட அமெரிக்கர்”… அவரின் ரியாக்ஷன் இருக்கே… வீடியோ வைரல்..!!!
SeithiSolai Tamil August 28, 2025 08:48 PM

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு இந்தியாவை சேர்ந்த வலைப்பதிவர் திஷா பன்சூரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதில், ஒரு அமெரிக்கர் முதல் முறையாககொழுக்கட்டை சாப்பிடுகிறார். அந்த இனிப்பு துண்டை அவர் வாயில் போடும்போது முகத்தில் தெரியும் சந்தோஷம், ஆச்சரியம் மற்றும் திருப்தி அவரது உணர்வுகளை அப்படியே வெளிக்காட்டுகிறது.

“இதுபோல் சுவையானது என் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்ல” என்ற அமெரிக்கரின் பதில் பலரையும் கவர்ந்துள்ளது. இது ஒரு இனிப்பின் சுவையை மட்டும் காட்டுவதல்ல, இந்திய பாரம்பரியத்தை வெளிநாட்டவர்களும் ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Disha pansuriya (@dishakpansuriya)

“>

இந்த வீடியோ இதுவரை 5 லட்சத்துக்கும் மேல் பார்வைகள் பெற்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த காணொளி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு அமெரிக்கரின் வாயில்வழியாக உலகம் முழுவதும் புகழ் பெறும் வகையில், இந்நிகழ்வு பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்துகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.