Breaking: தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு… 118 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!
SeithiSolai Tamil August 28, 2025 08:48 PM

தமிழ்நாட்டின் உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்று முன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையம் பகுதியில் பழனி பவித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தோல் பதனிடம் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பவித்ரா மாயமாகிவிட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என பழனி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரை பிடித்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதில் ஷமீல் அகமது உயிரிழந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆம்பூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ஆம்பூர் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 54 காவலர்கள் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் கைதான 118 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் கடந்த பத்து வருடங்களாக இந்த வழக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அதன்படி இந்த வழக்கிலிருந்து மொத்தம் 118 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.