உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள செயிண்ட் பேட்ரிக் பள்ளியில் இருந்து மாணவர்களை வீடுகளுக்குக் அழைத்து சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில், புதன்கிழமை பிற்பகலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பேருந்தில் 17 மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருந்தனர். வாகனத்தில் புகை வெளியேறுவதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தி, அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
“>
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முற்றிலும் கட்டுப்படுத்தினர். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், பேருந்து தீயில் முழுவதும் மூழ்கிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தீவிபத்தின் காரணமாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களின் உயிர் தப்புவதற்கு காரணமான பேருந்து ஓட்டுநரின் விரைவான செயல் அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.