தெருநாயால் என் கண்ணுமுன்ன… என் குழந்தை… கதறி அழுத தந்தை… வைரலாகும் வீடியோ…!!
SeithiSolai Tamil August 29, 2025 12:48 PM

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்போர் அனைவரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. பிரபலமான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு தந்தை தனது வாழ்வில் ஏற்பட்ட மாபெரும் இழப்பைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், தினமும் தனது ஆறு வயது மகனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள், அவ்வாறு செல்லும்போது, தெரு நாய் ஒன்று திடீரென ஆட்டோ முன் வந்ததால், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அவரது கண் முன்னேயே அவரது மகன் உயிரிழந்து விட்டான் என்று அந்த தந்தை கண்ணீருடன் பகிர்ந்தார்.

இந்த காணொளி தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. காணொளியைப் பார்த்த பலரும், அந்த தந்தையின் வலியை உணர்ந்து, சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Voice & Vision (@voice_vision_talks)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.