தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கிருஷ்ணவேணி (22). கங்கைகொண்டானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், உடல்நிலை பாதிப்பால் கடந்த 4 நாள்களாக வேலைக்கு செல்லவில்லையாம். கிருஷ்ணவேணி அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை அவரது தாய் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மன விரக்தி அடைந்த கிருஷ்ணவேணி விஷம் குடித்துவிட்டாராம். உறவினர்கள், அவரை கயத்தாறு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து, கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?