எம்.பி. சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி..!
Top Tamil News August 31, 2025 11:48 AM

தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

திருவள்ளூரில் அவர் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின்போது சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.