படகு கடலில் கவிழ்ந்து விபத்து - அகதிகள் 49 பேர் பலி!
Seithipunal Tamil August 31, 2025 10:48 AM

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 49 பேர் பலியாகினர். கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 17 பேரை மீட்டனர்.

ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி  அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதுகுறித்து உடனடியாக  தகவலறிந்து விரைந்து சென்ற மொரிடேனியா கடற்படையினர் விரைந்து சென்று கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 17 பேரை மீட்டனர். மேலும் , இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் மாயமாகினர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்ப்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தசம்பவம் மொரிடேனியா நாட்டின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.