உஷார்... தமிழகத்தில் நாளை முதல் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உட்பட பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
Dinamaalai August 31, 2025 11:48 AM

தமிழகத்தில் நாளை செப்டம்பர் 1ம் தேதி முதல் பல சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்கிறது. அதன் படி நாளை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விக்கிரவாண்டி (விழுப்புரம்), மேட்டுப்பட்டி, வீரசோழபுரம் மற்றும் நத்தக்கரை (சேலம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), எலியார் பத்தி (மதுரை ), புதூர் பாண்டியாபுரம் (தூத்துக்குடி), மனவாசி, அரவக்குறிச்சி (கரூர்) ஆகிய சுங்கசாவடிகளில் கட்டணம்  உயர்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி வரையிலான 74 கி.மீ. தொலைவிலான நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 வழிச்சாலையை உளுந்தூா்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்த சாலைக்கான புதிய கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 1 முதல் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் நடப்பாண்டில்  கட்டண உயா்வு குறித்த விவரங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி  காா், ஜீப், பயணிகளின் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணமான ரூ.105-இல் மாற்றம் இல்லாமல் அதே கட்டணம் தொடா்கிறது. அதே நேரத்தில் பலமுறை பயணிக்க தற்போதுள்ள ரூ.155 கட்டணம் ரூ.160 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ.180லிருந்து ரூ.185 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான ரூ.270- லிருந்து ரூ.275 ஆகவும், மாதாந்திரக் கட்டணமாக ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயா்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில்   டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.360 லிருந்துரூ.370 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம் ரூ.540லிருந்து ரூ.545 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ. 10,845 லிருந்து ரூ.11,085 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனத்துக்கு (இரு அச்சுகளுக்கு மேல்) தற்போதுள்ள ஒரு வழிக்கட்டணம் ரூ.580-லிருந்து ரூ.595 ஆகவும், பலமுறை பயணிக்க கட்டணம் ரூ.870-லிருந்து ரூ.890 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ,.17,425 லிருந்து ரூ.17,820 ஆகவும் உயா்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  பள்ளி பேருந்துகளுக்கான கட்டணமாக ரூ.1000  காா்,ஜீப், வேன் உள்ளிட்ட உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கும் வகையில், மாதாந்திர பாஸ் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.