பொதுவாக உணவு வகைகளில் சில வகை உணவுகளை சம்மர் சீசனில் தவிர்த்தால் டாக்டர் வீட்டுக்கு அலைய வேணாம் ,அந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலர் வெயில்காலத்தில் , காரம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதுண்டு .இவற்றுடன் புளிப்பு, உப்பு தவிர்ப்பது நல்லது
2.மேலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை,மசாலா உணவுகளையும் தவிர்ப்பது நல்லது
3.சிலர் அதிக ஆயில் புட் சாப்ப்பிடுவர் .அதனால் எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4.சிலர் அதிகம் காபி, தேநீர் குடிப்பர் .அவற்றை அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்
5.சிலர் சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள உணவு சாப்பிடுவர் .அது போன்ற இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது
6.சிலர் குளிர்ச்சியான குளிர்பானங்கள் ஐஸ் தண்ணீர் குடிப்பதுண்டு .அவற்றை தவிர்ப்பது நல்லது
7.சிலர் வெயில் காலத்தில் கத்திரிக்காய் சாப்பிடுவர் .இந்த கத்திரிக்காய் , கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்
8.பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை யும் வெயில் நாளில் குறைக்க வேண்டும்
9.அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை அளவாக சாப்பிடுவது வெயில் காலத்தில் நலம் சேர்க்கும்