ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!
WEBDUNIA TAMIL August 31, 2025 12:48 AM

அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்பதை தடுக்கும் விதமாக, அமெரிக்க அரசு அவரது விசாவை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கை, பாலஸ்தீன மக்களுக்கும், அந்நாட்டு அதிபருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், பல மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழலில், பாலஸ்தீனம் ஐ.நா.வில் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதற்கு மேலும் ஆதரவு திரட்டலாம் என்ற அச்சத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த விசா ரத்து சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது, பாலஸ்தீன அதிபரை ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசவிடாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த செயல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது,

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.