குட் நியூஸ்… தமிழகம் முழுவதும்… “விரைவில் இவர்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை” உதயநிதி உற்சாக அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil August 31, 2025 12:48 AM

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 17 லட்சம் பெண்கள் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

விண்ணப்பித்தவர்களின் விவரங்களை விரைவாகவும் அலட்சியமின்றியும் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு உடனடியாக உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால், விரைவில் புதிய பயனாளிகளுக்கு நற்செய்தி கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.