ரெண்டு நாள் தான் டைம் அதுக்குள்ள அவன் வரனும்.. உச்சக்கட்ட கோபத்தில் அஜித்.. என்ன நடந்தது ?
CineReporters Tamil August 31, 2025 12:48 AM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். என்னதான் உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் நாளுக்கு நாள் இவரை பின்தொடரும் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது.

சினிமா நிகழ்வுகள் பொது நிகழ்ச்சிகள் என்று எதிலுமே தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத நபராக அஜித் இருந்து வருகிறார். அப்படி அவர் செய்கின்ற நல்ல விஷயங்கள் எதுவும் வெளியில் தெரிவதில்லை. தான் செய்த உதவிகளை என்றுமே வெளியில் சொன்னதும் கிடையாது அதை அறிக்கையிடும் பழக்கமும் கிடையாது. மனது கேட்காமல் யாராவது அஜித்தின் பெருந்தன்மையை வெளிய சொல்லிவிடுவார்கள் அப்பொழுதுதான் அவர் இவ்வளவு உதவி செய்திருக்கிறாரா என்று வெளியில் தெரிய வரும்.

#image_title

அதில் குறிப்பாக அஜித் பத்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவி செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சினிமா விமர்சகர் பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் அஜித் குமாரை பற்றிய வெளிவராத தகவலை பகிர்ந்துள்ளார். அதில்,” குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் உடன் துணை கதாபாத்திரத்தில் நடிக்க கேரக்டர் தேடுதல் நடந்தது. அவருக்கு இணையாக கலராகவும் நல்ல உயரமாகவும் அதே சமயம் அவருக்கு ரீச் லுக் ஆக இருக்க வேண்டும் என்று கண்டிஷன்ஸ் இருந்தது”.

”அதற்கு ஏற்றார் போல் வட மாநிலத்திலிருந்து ஒரு நபர் கிடைத்தார். அவரை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. அந்த நபரின் பெயர் உசைன் அஜித் தொடர்ந்து அவரை கவனித்துக் கொண்டே வருகிறார். அப்பொழுது அவருக்கு ஒரு விஷயம் தெரிகிறது அவருடைய ஒரு கண்ணில் உள்ள கருவிழிகளில் குறைபாடு இருப்பதை கண்டறிகிறார்”.

#image_title

”ஒரு நாள் அவரை அழைத்து கேரவனில் கூப்பிட்டு உனக்கு என்ன ஆச்சு என்று விஷயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பிறகு இயக்குனரை அழைத்து இனிமேல் இவன் இந்த படத்தில் நடிக்க கூடாது என்று சொல்லிவிட்டார். நீ உடனே ஹைதராபாத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள் அதற்கான பணத்தை நான் தருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயம் உசேனை அனுப்பி வைத்த மேனேஜருக்கு தெரிய வந்தது”.

’அவர்களின் ரூல் படி இப்படி துணை நடிகர்களாக வருபவர்கள் எக்காரணத்தை கொண்டும் நடிகர்களுடன் பேசக்கூடாது ஏன் அவர்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுக்க கூடாது அப்படியே இருக்கும் பட்சத்தில் உசைன் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை சொல்லி இப்படி செய்திருப்பது அவரை மிகவும் கோபத்தில் உள்ளாகி இருக்கிறது. உடனே அவரை ஹைதராபாத் கண் ஆஸ்பத்திரியில் இருந்து அவரை விரட்டி அடித்துள்ளார்”.

”அஜித் இரண்டு நாட்கள் கழித்து உசைனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு இடைப்பட்ட சூழலில் அஜித்துக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அந்த மேனேஜரை பிடித்து கண்ணா பின்னா என்று திட்டி உள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற அஜித் இன்னும் இரண்டு நாள்கள் தான் உனக்கு டைம் அதுக்குள்ள அந்த பையன் இங்க வரணும் இல்லைன்னா வேற மாதிரி ஆயிடும் என்று கோபமாக கத்தி உள்ளார்”.

”அவர்களும் அவரை தேடி கண்டுபிடித்து அஜித்திடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது அந்த உசைன் சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது”. இவ்வாறு அஜித் செய்த உதவிகளையும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தையும் விளக்கிக் கூறியுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.