Samsung A17 5G : ஏஐ முதல் மூன்று கேமரா செட் அப் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது சாம்சங் ஏ17 5ஜி!
TV9 Tamil News August 31, 2025 12:48 AM

இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்களில் ஒன்றுதான் சாம்சங் (Samsung). இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நல்ல தரத்துடனும், தனித்துவமாகவும் இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் சாம்சங் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் ஏ17 5ஜி ஸ்மார்ட்போனை (Samsung A17 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் ஏ17 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் ஆன இந்த சாம்சங் ஏ17 5ஜி ஸ்மார்ட்போனில் ஜெமினி லைவ் (Gemini Live), வட்டமிட்டு தேடுவது (Circle to Search) உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொடுக்க2803ப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் சிம்பிள் டிசைன் கொண்டு இருந்தாலும், இதில் மூன்று கேமரா செட் அப் (Triple Camera Set Up) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  பல அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் ஆக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Redmi Note 15 Series : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 15 சீரீஸ்!

சாம்சங் ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Got 99 problems but no one to ask?
Now you can ask the new Galaxy A17 5G!
Packed with AI-powered features like Gemini Live and Circle to Search, it’s the awesome buddy that’s always got your back. pic.twitter.com/OnvgupMOFh

— Samsung India (@SamsungIndia)

இந்த சாம்சங் ஏ17 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+Super AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Eynos 1330 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் விலையில், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி!

விலை மற்றும் இதர அம்சங்கள் என்ன என்ன?
  • 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.20,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.23,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.1,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.