தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா பகுதியைச்சேர்ந்த குமரன் ரவிசங்கர் (பி.நெகட்டிவ்)177 முறை குருதிக் கொடைவழங்கியதற்காக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.
அறிவியல் வளர்ச்சியில் மனித ரத்தத்திற்கு மாற்றாக இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவிலலை. உடலில்ஓடும் உயிர்த்திரவம் ரத்தம் என்று கூறப்படுகிறது. மனிதஉடலில் சராசரியாக 5.16 லிட்டர் ரத்தம் இருக்கும்.
ரத்ததானத்தின்போது 350 மில்லி மட்டுமேஎடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக்கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 4 பேர் உயிரை காப்பாற்ற முடியும்.கொடையாளி அளிக்கும் ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள்,
தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் போதே உடலின் உயிர்கூறான ரத்தம் வழங்கப்படுவது கூட ஒருவகையில் உடல்உறுப்புதானம் போன்றதுதான் எனமருத்துவர்கள் கூறுகின்றனர்.
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் பிறந்த குமரன் ரவிசங்கர்(வயது 56) சமூகவியலில் முதுகலைப்பட்டம்படித்து தற்போது ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியில் முழுநேர சமூக சேவகராக செயல்பட்டு வருகிறார். இவருடைய தந்தைகுமரன், தாய் வேதவள்ளி, தங்கை நர்மதா, மனைவி பாரதி ஆங்கில முதுகலைப் பட்டம் (எம்.ஏ பி.எட்) முடித்துஆசிரியராக பணியாற்றி வருகிறார்.மகன்சசிகுமார்பி.டெக்(ஐடி)முடித்துள்ளார்.பூவிருந்தவல்லி,தில்லைநர்சிங் ஹோமில் குருதிக் கொடை செய்து தனது இரத்ததானக் கணக்கைதொடங்கினார் ரவிசங்கர். அவரது அம்மாவுக்குஇந்தச் செய்தி தெரிந்ததும் மூன்றுநாட்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று நகைச்சுவையாக கூறினார். அதன் பிறகு வீட்டில் உள்ள
தொலைபேசி அழைப்பிற்கு வரும்தகவல்களை எழுதி வைத்து குருதிகொடை அளிக்க உதவியாக பெற்றோர்கள் இருந்தது சிறப்பம்சமாகும்.
கண் தானம் முதல் உடல்உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் வரைஅவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.சுமார் 18 ஜோடி கண்கள் தானம்செய்யப்படடு உள்ளது குறிப்பிடத்தக்கது.தனது இறப்பிற்கு பிறகுவேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு குமரன் ரவிசங்கர் அவர்கள் உடல்
தானம் செய்ய பதிவு செய்துள்ளார்.தமிழ்நாடு அரசு மற்றும் மாநில அரசுஇணையதளத்தில் உடல்உறுப்புதானம் செய்ய பதிவு செய்துள்ளார்,அகர்வால் கண் மருத்துவமனையில்கண்தானம் செய்ய பதிவும் செய்துள்ளார். 177 முறை குருதிக்கொடை செய்துள்ள இவர் முதல் முறையாக 1984-ல் ஒரு கர்ப்பிணி
பெண்ணுக்கு ரத்த இழப்பின் காரணமாக இரத்தம் (B-ve) தேவைபட்டதை தொடர்ந்து பூவிருந்தவல்லி தில்லை நர்சிங் ஹோமில் இரத்த தானம் செய்தார்.அவர் செய்த இரத்த தானம் அனைத்தும் அவசர
தேவைக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை,போரூர், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மட்டும் சுமார் 56 முறைஅவசர தேவைக்கு குருதி கொடைஅளித்துள்ளார். குறிப்பாக, சென்னையில் உள்ள அனைத்து பிரபல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தன்னுடைய தொடர்புஎண் இருப்பதாகவும், ஆண்டுதோறும் பலமாவட்ட ஆட்சியர்கள் பாராட்டு சான்றுவழங்கி கௌரவித்து இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன்இணைந்து, வாலாஜா தலைமை அரசு
மருத்துவமனையில்மக்கள் நல பணிகள் சுமார் இரு கொரோனா,அலைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட இருநூறு நாட்கள் உதவிகள் மேற்கொண்டு தமிழக அரசின் சிறப்பு விருதினை சுதந்திர தின விழாவில் பெற்றுள்ளார்.தொடர்ந்து மாவட்டகாவல்துறையினருடன் இணைந்துபோக்குவரத்து உள்ளிட்ட சமூக பணி
களில் ஈடுபட்டுள்ளார். அதற்கானபாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.சென்னையில் படிக்க வந்த
உகாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு சாலை விபத்தில் கால் எலும்பு முறிவுஏற்பட்டு பிரபல தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட போது அழைப்பைஏற்று அவசர தேவைக்கு இரவோடுஇரவாக குருதி கொடை அளிக்கப்பட்ட அனுபவம் மறக்க முடியாதஅனுபவங்களில் ஒன்று என தெரிவித்தார்.இளைஞர்களுக்கு அழைப்பு ,தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு
15 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.இரத்த தான முகாம்கள் மூலம்
நமக்கு பன்னிரண்டு லட்சம் ரத்த யூனிட்டுக்கள்க மட்டுமே கிடைக்கிறது. இளைஞர்களை இரத்த தானம் செய்ய திருப்பும் போது போதையின் பாதையில் பயணிக்காமல்,போதையில்லா தமிழகத்தை உருவாக்கலாம்.ஆகவே, அனைத்து தரப்பு மக்களும் இரத்த தானம் செய்வதால் மனித உயிரிழப்பு தடுக்க படுவதோடு இளைஞர்களை நல்வழியில் செல்ல பயன் படுத்தி கொள்ளலாம் என இரத்த தான ஆர்வலர்.குமரன் ரவிசங்கர் அவர்கள் பொதுமக்களுக்கும்,இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்