பாகிஸ்தானின் சில இலக்குகள் கூட ஆபரேஷன் சிந்தூரில் எங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினோம் என இந்திய விமானப்படை துணைத்தளபதி தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி யது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயரிட்டு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தது வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி நேற்று பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்தியாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் 4 நாட்களிலேயே மண்டியிட்டது என்றும் இந்த தாக்குதலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதாகஅவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் நாங்கள் ஒவ்வொரு ஆயுதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம். 1971-ம் ஆண்டு போரில் தாக்குதலுக்கு ஆளாகாத பாகிஸ்தானின் சில இலக்குகள் கூட ஆபரேஷன் சிந்தூரில் எங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினோம்.
போரை தொடங்குவது எளிது, ஆனால் முடிப்பது கடினம். அதை மனதில் வைத்திருப்பது முக்கியமானது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், முழுமையான சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது தான். தாக்குதலின்போதுஆனால் எந்தவித சேதமும் இல்லாமல் பார்த்துக்கொண்டோம். எங்கள் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு மக்களுக்குத்தான் இதற்கான பெருமை சேரும். ஏனெனில் இது எளிதான விஷயம் அல்ல. இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை வழங்குவதுதான். அதை சரியாக செய்தோம்” என்று கூறினார்.