Ajithkumar Racing: முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் சமீபகாலமாக ரேஸிங் களத்தில் அதிகமாக காணப்படுகிறார். அந்த வகையில் தற்போது நடந்து வரும் ரேஸிங் போட்டியில் அவர் வைத்திருக்கும் திடீர் கோரிக்கை ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் வைத்திருந்தவர் அஜித் குமார். ஆனால் அப்போது அவருக்கு நடந்த பல விபத்துக்கள் அதிலிருந்து ஒதுங்கி இருக்க வைத்தது.
கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அவரால் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது. பல வருடங்கள் கழித்து கடந்த சில வருடங்கள் ஆகவே பைக் சுற்றுப்பயணம் அதிகமாக செய்து வந்தார் அஜித்குமார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு திடீரென அவர் ஒரு ரேஸிங் நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனம் சார்பில் துபாயில் நடந்த ரேஸிங் போட்டியிலும் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார். பொதுவெளியில் காணப்படாமல் இருந்த அஜித் குமார் பல பேட்டிகளையும் கொடுத்து வந்தார்.
அந்த வகையில் இனி நான் முதல் ஆறு மாதம் சினிமாவிற்கும் அடுத்த ஆறு மாதம் ரேஸிங் இருக்கும் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தற்போது அடுத்த கட்ட ரேஸிங் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அதில் அஜித் குமார் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்பொழுது திடீரென செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வேடிக்கையானது இல்ல. அதை பிரபலப்படுத்துங்கள். எனக்காக இல்ல. விளையாட்டிற்காக புரோமோட் செய்யுங்கள். அப்போது தான் மக்கள் இதற்கு வீரர்கள் எவ்வளவு கஷ்டம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும்.
கண்டிப்பாக இந்தியாவில் எஃப்1 வீரர்கள் வருவார்கள். அதற்காகவே மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்துங்கள் என தெரிவித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அஜித்குமார் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.