வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் அறியபட்டவர் நடிகர் சூரி. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடிக்குழு படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
காமெடி நடிகராக வலம் வந்த அவரை ஹீரோவாக மாற்றிய பெருமை வெற்றிமாறனையே சாரும். விடுதலை படத்திற்கு பின் சூரியின் பாதையே மாறியது.தொடர்ந்து விடுதலி 2,கருடன் மற்றும் மாமன் போன்ற வெற்றிபடங்களை கொடுத்தார். தற்போது மண்ணாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
Ravikumar
இந்த நிலையில் சூரி தற்போது அயலான் படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இன்று நாளை படத்தினை பார்த்த சிவகார்த்திகேயன் தனக்கு ஒரு படம் செய்து தருமாறு கேட்டார். அப்படி உருவானதுதான் அயலான். ஆனால் அந்த படம் முடிய4 வருடங்கள் ஆனது. சிவகார்த்திகேயனுக்கும் அவர்து நண்பருக்குமான பிரச்சனையில் 4 வருடங்களை வீணடித்தார் ரவிக்குமார். 2 பாகங்களாக வெளிவருவதாக இருந்த அந்த படத்தின் முதல் பாகம் தோல்வி அடைந்ததால் அடுத்த பாகம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில்தான் ரவிக்குமாருக்கு கை கொடுக்க முன்வந்துள்ளார் சூரி.இது குறித்த அதிகார பூர்வ அறிவுப்பு விரைவில் வரும் எனக் கூறப்படுகிறது.