தினந்தோறும் பேச்சரங்கம், கலையரங்கம்... மதுரையில் களைக்கட்டும் புத்தக திருவிழா!
Dinamaalai September 06, 2025 06:48 PM

தமிழகம் முழுவதும், புத்தகப் பிரியர்களின் ஆர்வத்திற்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரையில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது. செப்டம்பர் 15ம் தேதி வரை 10 நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 


தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ள இதில், 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் ‘சிந்தனை அரங்கம்’ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. உணவு அரங்கு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை அரங்குகளும் வைக்கப்பட்டுள்ளன.  இந்த புத்தக திருவிழாவில் அனைத்து புத்தகங்களையும்  10 சதவீத தள்ளுபடி விலையில் வாசகர்கள் வாங்கி செல்லலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.