நடிகரும், தேமுதிக கட்சி நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் சகோதரி நேற்று காலமானார். அவரது இறுதிசடங்குகள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் மதுரையில் இருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல வருடங்கள் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக மாறினார். இவரின் அப்பா மதுரையில் ரைஸ் மில் நடத்தி வந்தவர்.
அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற திரைப்படங்கள் விஜயகாந்தை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதன் பிறகு திரைத்துறையில் அவருக்கு ஏறுமுகம் தான்.
விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி. இவர் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். விஜயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக மருத்துவத்துறையில் பல வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். 78 வயதான அவர் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார்.. அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 1.30 முதல் 3 மணிக்குள் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற இருப்பதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?