Sivakarthikeyan: ஒரு ஆங்கராக தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். அதற்கு முழுக்க முழுக்க அவருடைய விடா முயற்சி தான் காரணம். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து இன்று வெள்ளி திரையில் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இன்று உருவெடுத்து இருக்கிறார். கோலிவுட்டில் ஒரு சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
அஜித் விஜய் இவர்களுக்கு அடுத்தபடியாக இடத்தில் மார்க்கெட் உள்ள நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவருடைய படங்களுக்கு என ரசிகர்கள் ஏராளமான பேர் உள்ளனர். தற்போது அவருடைய நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்டாகவே இவருக்கு அமைந்தது.
மேஜர் முகுந்த் வரதராஜன் பயோ பிக்கில் உருவான அந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டினார் சிவகார்த்திகேயன். ஒரு பெரிய தாக்கத்தையே மக்களிடையில் ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அந்த படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து இவருடைய அந்தஸ்தை சினிமாவில் உயர்த்தியது. தற்போது இவருடைய நடிப்பில் என்னென்ன படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன என்பதை பற்றிய ஒரு செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கைவசம் ஏராளமான படங்களை சிவகார்த்திகேயன் வைத்திருக்கிறார். தற்போதைய தேதிக்கு மிகவும் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்திற்கு பிறகு மதராஸி மற்றும் பராசக்தி போன்ற திரைப்படங்களில் கமிட்டானார் சிவகார்த்திகேயன். இதில் மதராஸி திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படமும் கூடிய சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சிபி சக்கரவர்த்தியுடன் அவர் இணைந்து பணியாற்ற போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த படத்துக்காக தான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதுதான் அவருடைய அடுத்த படம் என்றும் சொல்லி இருக்கிறார். சிபி சக்கரவர்த்திக்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைய போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனை அடுத்து புஷ்கர் காயத்ரியுடன் ஒரு பேச்சுவார்த்தை இருப்பதாகவும் கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
Siva_ Cibi
இதில் சிபி சக்கரவர்த்தியுடன் இணையும் அந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் மோகன் லால் நடிக்கப் போவதாகவும் மோகன்லாலுடன் அதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்த வரிசையில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் இவருடனும் ஒரு படத்தில் நடிக்க போவதாக ஒரு தகவல் இருக்கிறது. அதனால் இவருடைய இந்த லைன் அப் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.