இன்று முதல் 2 மாதத்திற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
Dinamaalai September 10, 2025 12:48 PM

இன்று செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரையில் அடுத்த இரு மாதங்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, 6 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஐந்து விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் - திருச்சி சோழன் (22675), எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் இன்று செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.