Vastu Tips: வீட்டு வாசலில் வேப்ப மரம் இருக்கா?.. இனி பிரச்னைகள் விலகி ஓடும்!
TV9 Tamil News September 10, 2025 12:48 PM

இந்து மத வேதங்களின் படி இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினங்களும் தனக்கென தனி சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு கடவுளுக்கும், ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மரங்களை காண்பது அரிதாகி விட்ட நிலையில் கிராமங்களில் பல்வேறு விதமான மரங்கள் இன்றளவும் வளர்ந்து பசுமை நிறைந்து காணப்படுகிறது. முன்பெல்லாம் அனைவரது வீட்டு வாசலிலும் பெரிது, சிறிதாக வேப்ப மரம் வைத்திருப்பதை பார்த்திருப்போம். இந்த வேப்ப மரம் ஆன்மீக முக்கியத்துவத்தையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. மேலும், ஜோதிடத்தில், வேப்ப மரம் தெய்வீக சக்திகளின் தாயகமாக பார்க்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் வேப்ப மரத்தை எந்த திசையில் வளர்க்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களை நாம் காணலாம்.

வேப்ப மரம் பற்றிய வாஸ்து குறிப்புகள்

வேப்ப மரம். இந்த மரம் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, வேப்ப மரம் சனி மற்றும் கேதுவுடன் தொடர்புடையது. இந்த இரண்டு கிரக தோஷங்களின் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் ஒரு வேப்ப மரத்தை நட்டு அதை வழிபடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

வேப்ப மரத்தைக் கடவுளாக பாவித்து வழிபாடு செய்வதன் மூலம் சனி தேவனின் கோபம் குறையும் என்பது நம்பிக்கையாகும். மேலும் சனி பகவான் மகிழ்ச்சியடைந்து தன்னை வழிபடுபவர்கள் மீது சிறப்பு ஆசிகளைப் பொழிவார் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேப்ப இலைகள் கலந்த நீரில் குளிப்பதால் கேது தொடர்பான தோஷங்கள் நீங்கும் என கூறப்படுகிறது.

Also Read: வீட்டில் இந்த திசையில் புத்தர் சிலை இருந்தால் செல்வம் கொட்டும்!

வேப்ப மரம் தெய்வீக சக்திகளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் ஒரு வேப்ப மரத்தை நடவும். இந்த இடம் எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இது நேர்மறை கிரக தாக்கங்களை வலுப்படுத்துகிறது. வேப்ப மரத்திலிருந்து வரும் காற்று ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது. இதனுடன், முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் பெறப்படுகின்றன. முன்னோர்களின் கோபங்களில் இருந்தும் நாம் நிவாரணம் பெறுகிறோம்.

சனியின் தீமையிலிருந்து விடுபடவும், சனி தேவனின் ஆசிகளைப் பெறவும், வேப்ப இலைகளால் ஆன மாலையை சாற்றி வழிபட வேண்டும். இதைச் செய்வதன் மூலம், சனியின் தீமையிலிருந்து ஒருவர் நிவாரணம் பெற முடியும் என்பது ஐதீகமாகும். மேலும் சனியுடன் தொடர்புடைய எந்த அசுப விளைவுகளும் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது ஜாதகத்தில் அசுப பலன்களைத் தரும் கிரகங்களை அமைதிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேப்ப மரம் செவ்வாய் கிரகத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த மரத்தை வீட்டின் தெற்கு திசையில் நடுவது எப்போதும் நல்லது. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கில் வேப்ப மரத்தை நடக்கூடாது என கூறப்படுகிறது ஏனெனில் பெரிய மரம் என்பதால் இந்த திசைகளில் இருந்து வரும் நேர்மறை ஆற்றலைத் தடுக்கும் என சொல்லப்படுகிறது

Also Read: Vastu Tips: சாமந்தி பூ செடியை இந்த திசையில் வீட்டில் நட்டால் அதிர்ஷ்டம்!

வீட்டில் மரங்களை வளர்க்க இடம் இருந்தால், நிச்சயமாக வேப்ப மரத்தை வளர்க்கவும். இது ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், ஆரோக்கிய ரீதியாகவும் பல நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.