விடாமுயற்சி படம் வெற்றிப்படம்தான் – இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன விசயம்!
TV9 Tamil News September 13, 2025 02:48 PM

கோலிவுட் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் முன்தினம் பார்த்தேனே. இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி (Director Magizh Thirumeni) இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான தடையர தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் மற்றும் விடாமுயற்சி ஆகியப் படங்கள் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடித்ததைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் பலருக்கு பிடித்து இருந்தாலும் சிலர் நடிகர் அஜித்திற்கு மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய இல்லை என்று வருத்தம் தெரிவித்தனர். மேலும் படம் ஹாலிவுட் அளவிற்கு இருக்கு என்று பாராட்டுகள் கிடைத்தாலும் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என்று பலர் கருத்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் மகிழ் திருமேனி:

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டி ஒன்றில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் படம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குநர் மகிழ் திருமேனி என்னை பொருத்தவரை விடாமுயற்சி படம் வெற்றிப் படம் தான்.

இந்தப் படம் அஜித் சாருக்குக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. படத்தின் தயாரிப்பாளருக்கும் வெற்றியைக் கொடுத்தது. விநியோகஸ்தர்களும் படம் வெற்றி என்று தெரிவித்தனர். இவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி என்று இயக்குநர் மகிழ் திருமேனி அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

இணையத்தில் கவனம் பெறும் மகிழ் திருமேனியின் பேச்சு:

Director #MagizhThirumeni talks about #VidaaMuyarchi success 🤩💥#AjithKumar #AK64 #Thala pic.twitter.com/OhWTGhnocm

— ᥫ᭡𝐕𝐢𝐧𝐢𝐭𝐡𝐚🦋 (@VinithaAK)

Also Read… தூங்கி எழுந்ததும் ரஜினிகாந்தா மாறியிருந்தா இதுதான் பண்ணுவேன் – சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய விசயம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.