நாள் முழுவதும் அனைவரும் சமச்சீரான உணவை எடுத்து கொள்வது முக்கியம். அதன்படி, நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சர்க்கரைகள், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் (Vitamins) அல்லது தாதுக்கள் இருப்பது அவசியம். இவை நம் உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலை அளிக்கவும், வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. நாம் சாப்பிடும்போது, எந்த நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வது முக்கியம். காலை உணவு (Breakfast) என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. இது நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. காலையில் காலை உணவை சாப்பிடாவிட்டால் அல்லது அவசரமாக ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், சோர்வு மற்றும் தலை சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, காலையில் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது நல்லது. இந்தநிலையில், காலை உணவாக என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
காலை உணவின் முக்கியத்துவம்:சில உணவுகள் ஆரோக்கியமான என்றாலும், இவற்றை காலை உணவாக சாப்பிடக்கூடாது. இந்த உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், வெறும் வயிற்றில் அவற்றை சாப்பிடுவது சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கும் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. எனவே, உணவில் கொழுப்பு மற்றும் அதிக புரதம் அதிகமாக இருக்க வேண்டும். காலை உணவாக ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகள் சில உள்ளன. ஏனெனில், இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ: வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்
டீ அல்லது காபி:காலையில் காலை உணவோடு டீ அல்லது காபி குடித்தால், உடலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாது. காலை உணவோடு டீ அல்லது காபி உட்கொள்வது உங்கள் உடலில் இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை குறைக்கும். எனவே, அக்காரணத்தை கொண்டும் காலையில் நீங்கள் சாப்பிடும்போது டீ மற்றும் காபியை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
இந்த பழங்களை தவிர்ப்பது நல்லது:எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு அல்லது பெர்ரி பழங்கள் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் ஆகும். மேலும், இந்த வகை பழங்களில் சிட்ரஸ் உள்ளிட்ட பல்வேறு அமிலங்களும் உள்ளன. எனவே, இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகளை அதிகரிக்கும். இது நாள் முழுவதும் உங்களுக்கு தொந்தரவுகளை கொடுக்கலாம்.
ALSO READ: துரித உணவுகளை தூரம் வையுங்கள்.. ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும் அபாயம்..!
எண்ணெய் மற்றும் காரமான உணவுகள்:இன்றைய நவீன காலத்தில் பல இடங்களில் கிடைக்கும் மிட் நைட் பிரியாணி, அதிகாலையில் பிரியாணி போன்றவற்றை தேடி சென்று சாப்பிடுகிறார்கள். இது மாதிரியான அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகள் அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது உங்களுக்கு வயிறு உபாதைகளை ஏற்படுத்தலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)