இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் தவறான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை போன்ற பழக்கத்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வயது வரம்பின்றி இளைஞர்கள் உட்பட பலரும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள்.இந்த நோய்களை வெல்ல உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தி முக்கியம் .அதற்கு மஞ்சள் நமக்கு உதவும் என்று ஆயுர் வேதம் கூறுகிறது .இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக உப்பும், மஞ்சள் தூளும் சமையலறையின் பிரதான பொருட்கள் மட்டுமல்ல மருத்துவத்திலும் சிறப்பான பொருள் .
2.ஆயுர்வேத மருத்துவத்தில் , மஞ்சள் மிக சிறந்த மருத்துவ மூலிகையாக கருதப்படுகிறது.
3.மஞ்சளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன .
4.அதனால்தான் காய்கறிகள் மற்றும் பாலில் மஞ்சள் சேர்த்துக் குடித்தும் ,சாப்பிட்டும் வருகிறோம்
5. மஞ்சள் தண்ணீர் குடித்திருக்கிறீர்களா? இல்லை என்றால், அதன் பலன்களை தெரிந்து கொண்டு இனியாவது குடியுங்கள்
6.காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
7.காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது மூட்டு வலியையும் போக்குகிறது.
8. உங்கள் செரிமான கோளாறும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதன் மூலம் தீரும்
9.மஞ்சள் தண்ணீரால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்