உப்பு கலந்த பூண்டை பல்லில் வைத்தால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News September 14, 2025 01:48 PM

பொதுவாக  பல்வலி இம்சையிலிருந்து வெளி வர பல இயற்கையான வழிகள் உள்ளன ,வீட்டிலேயே அதற்கு சில செலவில்லா சிகிச்சை முறைகள் உள்ளன .இது பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம் 

1.பல்வலியுள்ளோருக்கு கடுகு எண்ணெய் போலவே கிராம்பு எண்ணெய்யை பல் வலிக்கு பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும். 
2.இந்த பல்வலிக்கு கிராம்பு மூலம் எப்படி சிகிச்சை தரலாம் என்று பாப்போம் .ஒரு பஞ்சில் சில துளி கிராம்பு எண்ணெயை நனைத்து எடுத்து கொள்ளவும் , 
3.பின்னர் 20-30 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பல்லின் மீது அந்த கிராம்பு பஞ்சை வைத்து கொள்ளுங்கள். இதன்மூலம் வலி குறையும். 
4.அடுத்து வேறு ஒரு சிகிச்சை முறையை பார்க்கலாம் .வெதுவெதுப்பான உப்புநீரில் வாயை தினமும் கொப்பளிக்கலாம். 
5.இப்படி உப்பு நீரில் கொப்பளிப்பதால்  வீக்கம் குறைந்து வலி மட்டுப்படும். 
6.அடுத்து பல்வலிக்கு பூண்டு சிகிச்சை முறை பற்றி பார்ப்போம் .பூண்டில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. 
7.முதலில் ஒரு பல் பூண்டை நசுக்கி, அதில் உப்பு கலந்து,எடுத்து கொள்வோம்  
8.பின்னர் வலியால் பாதிக்கப்பட்ட பல்லில் நேரடியாக அந்த உப்பு கலந்த பூண்டை வைத்து கொள்ளுங்கள்
9.இப்போது வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.