Hair Care: ஹேர் டானிக்காக செயல்படும் கொய்யா இலைகள்.. இதை எப்படி பயன்படுத்துவது..?
TV9 Tamil News September 14, 2025 11:48 PM

கொய்யா பலருக்கும் பிடித்த பழம் மற்றும் காய்களில் ஒன்று. இதன் ஊட்டச்சத்து ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மை தரும். ஒருபுறம், கொய்யா பழம் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மறுபுறம், இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, நல்ல இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. மேலும், நம் பார்வையை மேம்படுத்துகிறது. அதனுடன், புற்றுநோயை (Cancer) தடுக்கவும் உதவுகிறது. ஒரு கொய்யாவில் (Guava) 4 ஆப்பிள்கள் மற்றும் 4 ஆரஞ்சுகளுக்கு சமமான ஊட்டச்சத்து மதிப்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றன. கொய்யாவில் பல நல்ல பண்புகள் இருப்பது போல, அதன் இலைகளிலும் பல நல்ல பண்புகளும் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. கொய்யா இலைகள் முடி பராமரிப்பிலும் அதன் செயல்திறன் குறிப்பிடத்தக்கது.

முடி பராமரிப்புக்கு உதவும் கொய்யா இலைகள்:

கொய்யாப்பழம் உண்ணும்போது உடலுக்கு எப்படி பல நன்மைகளை தருகிறதோ, அதன் இலைகள் முடி பராமரிப்பிலும் சமமாக பயனுள்ளதாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொய்யா இலைகள், பல்வேறு உச்சந்தலைப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. அதன்படி, கொய்யா இலைகள் முடி உதிர்தலைக் குறைப்பதனுடன், புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ALSO READ: இளநரை ஏற்படாமல் இருக்கணுமா? இந்த 5 விஷயங்களைத் தவிருங்கள்

தலைமுடியில் கொய்யா இலைகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்: கொய்யா இலைச் சாறு

ஒரு கைப்பிடி ப்ரஷான கொய்யா இலைகளை தண்ணீரில் நன்கு கழுவி, அவற்றை ஒரு மிக்ஸியில் அரைத்து, பேஸ்டாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதை ஒரு மெல்லிய சல்லடை மூலம் வடிகட்டவும். சாற்றை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவினால், தலையில் உள்ள பொடுகை நீக்குகிறது. மேலும், உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது. முடி வேர்களை பலப்படுத்துகிறது.

கொய்யா இலைகளை வேகவைத்த தண்ணீர்:

ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை தண்ணீரில் 15-20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அது குளிர்ந்ததும், அந்த நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும். இப்படி செய்வதன்மூலம் முடி உதிர்தலைக் குறைக்கிறது. மேலும், இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

ALSO READ: மழைக்காலத்தில் உடலுக்கு தரும் மகத்துவம்.. நெல்லிக்காய் ரசம் செய்வது எப்படி..?

கொய்யா இலை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை:

கொய்யா இலை பேஸ்ட்டை தேங்காய் எண்ணெயுடன் கலந்து சிறிது சூடாக்கவும். இது ஆறியதும், உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பு போட்டு குளிக்கவும். இது முடியை மென்மையாகவும், ஊட்டமளிக்கும் தன்மையுடனும் மாறும். அதனுடன், தலைமுடியில் ஏற்படும் முனைகள் பிளவுபடுதல் மற்றும் கரடுமுரடான தன்மை குறைக்க உதவுகிறது.

இந்தநிலையில், வாரத்திற்கு ஒரு முறையாவது கொய்யா இலைகளைக் கொண்டு உங்கள் தலைமுடியைப் பராமரிப்பது நல்ல பலனைத் தரும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.